அன்பின் இருப்பிடம் சீனிவாசன்
ஆணவமற்ற வாசன் இவர்
இயல்பிலிருந்து (தன்) மாறாத்தன்மையால்
ஈகை என்பதின் இடறாமையுடையவர்
உண்மையின் உறைவிடம்
ஊக்கமதைக் கொண்டவர்
எல்லோரையும் இணைப்பவர்
ஏற்றமிகு இயல்புடையவர்
ஐயத்தைத் தீர்ப்பதில் சமர்த்தர்
ஒன்பது செல்வங்களுடன் ஒன்றினைக் கூட்டி ஈன்றவர்
ஓதும் (மந்திரம்) வழக்குடையவர்
ஒளடதம் எல்லோர்க்கும் இவர்
ஃ என்று என்னால் முடிவுரை எழுதமுடியாதவர்.
அளவிலா அன்பை எனக்குத் தந்து
இன்றிருக்கும் நிலைக்கு என்னை
உயர்த்தி பாசத்தைப் பொழிந்தவர்
என்னுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்
வாழிய வாழியவே
ராமகிருஷ்ணன் கே.ஆர்
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
AA chithappa's kavithai has certainly revealed his attachment with TRS thathaa as well as his poetic skills.
Nice one to read and enjoy!
Post a Comment