Wednesday, December 24, 2008

ரமேஷ்

ரமேஷ் எழுதின கமெண்டயே ஒரு போஸ்ட்டா போட்டுருக்கேன்
-- கிருபா


உங்க அனைவரின் "Articles About Thatha " வைப் படித்தேன், மகிழ்ந்தேன், உருகினேன், நெகிழ்ந்தேன்

நீங்கள் தனித்தனியே தங்கள் உள்ள வெளிப்பாடுகளை கொட்டியிருந்தபோதிலும் தாத்தாவின் பண்பு, பாசத்தைப் பிரதிபலித்தது ஒருசேர இருந்ததிலிருந்தே , அவரது உயர்தகு குணாதிசியம் பளிச்சிடுகிறது . மீண்டும் யோசித்து பல நினைவுகளை மனத்தில் கொண்டுவந்து தாத்தா பாட்டியின் தனி முத்திரைகளை வெளிச்சம் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அண்ணாத்தை சுரேஷ்
கண்ணு மெய்யாலுமே படா சோக்கா எய்திகீறேப்பா ..இன்னா .. நம்ம எல்லாருமே நடிப்புக் குடும்பம்கிறது சொம்மா Glaring ஆ தெரியுமே. ஒரு மேட்டர் கொடுத்தா ஒருரூபாய்க்கு நடிக்கச்சொன்னா நூறு ரூபாய்க்கு ஆக்ட் கொடுக்கிறர்ப்ல வரிஞ்சு கொட்டியிருக்கப்பா கரீட் .. தாத்தா பாட்டியைப்பத்தி எவ்ளோ எளுதினாலும் பத்தாதுதான்.அதுசரி, அது என்னா... கமெண்ட் கூட மேஜர் சுந்தர்ராஜன் கணக்கா விலாவரியா எளுதியிகீறெ


அண்ணாச்சி பாலுண்ணா.
பாலுண்ணா .. நான், நீ , சுரேஷ் மூணுபேரும் தான் பேரன் பேத்திகள்ளே குடுத்துவெச்சவங்க. ஏன்னா, தாத்தா பாட்டியோட, அதிகம் இருந்தவங்க நாம தான்.
என்ன பாசம் .. என்ன அரவணைப்பு, என்ன பரிவு .. பாட்டிய நானும், சுரேஷும் அம்மான்னு கூப்பிட்டது எவ்வளவு சரின்னு இப்ப நாமெல்லோரும் மனசைவிட்டு எழுதும்போதுதான் உணர்வு பூர்வமா அனுபவிக்க முடியுது.
முள்ளங்கி சாம்பாரா பாட்டி ,
யாரோ முருவாம் ,
வேம்பு சித்தி , பிரகதாம்பா சித்தி . சம்பு சித்தி

உன்னோட முத்திரைகள் எப்ப நினைச்சாலும் குதூகுலம்தான்

தாத்தாவோட கண்டிப்பும் கனிவான அப்ரோச்சும்தான் நம்பளை நல்லா rifine பண்ணிருக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தொடரட்டும் உன் நினைவலை வெளிப்பாடுகள்

No comments: